காப்பீட்டு நிதியை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை.


(நீலமேகம் பிரசாந்த்)

தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளிகள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியதோடு ஒரு பெண் தொழிலாளி பலியாகிய சம்பவம் அண்மையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில் குளவி கூடுகள் தொடர்பாக தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாமையினாலே இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதாக கூறி மக்கள் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து இ.தொ.கா உப தலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சக்திவேல் நேரடியாக களத்திற்கு சென்று தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துறையாடியுள்ளார்.

மேலும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததோடு,உனடியாக தேயிலை மலைகளிள் காணப்படும் குளவி கூடுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: