உறுதிப்படுத்தும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளது


கடந்த 18ம் திகதியுடன் தபால் மூல வாக்களர்களின் பட்டியல் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டை வெளியிடுதல் மற்றும் தபாலகங்களில் ஒப்படைக்கும் செயற்பாடு எதிர்வரும் 30ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு ஜீலை மாதம் 14, 15, 16 ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: