தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட ஜனாதிபதி செயலணி


நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்மென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தியுடனான அரசியல் தீர்வும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்;. வடக்கில் அபிவிருத்தி நிர்மாணப்பணிகளை துரிதமாக முன்னெடுக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

அரசியல்தீர்வு தொடர்பில் சாதாரண மக்கள் பொருளாதாரீதியில் பாதிக்கப்படுவார்கள். நடைமுறையில் இந்த தன்மையே நிலவுகின்றது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஒரு போதும் நாம் மறுக்கவில்லை. அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு அமைய விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்க கவனம்செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஊடாகவே மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்படும் என்பதை கூட்டமைப்பினர் தெரிந்து கொள்ள வேண்டும் பாராளுமன்றத் தேர்தல் விரைவாக நடத்தப்படும்.

 தமிழ் மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் தோற்றம் பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments: