நீண்ட நாள் போதை பொருள் வியாபாரி கைது


கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த நபர் ஓட்டமாவடி -மாஞ்சோலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்  நீண்ட காலமாக கஞ்சா (போதைப்பொருள்) வியாபாரம் செய்து வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

கைது செய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து 1கிலோ 775 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்து

No comments: