முஸ்லிம்களுக்கு எதிராக நிர்வாக பயங்கரவாதம் -ஹிஸ்புல்லாஹ்(எச்.எம்.எம்.பர்ஸான்)

நாட்டில் எந்தளவு முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்காமல் தடுக்க முடியுமோ அந்தளவு நிர்வாகப் பயங்கரவாதம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வருகிறது.

மட்டக்களப்பு கல்குடா தொகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்குள்ள மக்களை சந்தித்து பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது சமூகம் பாரியளவு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது அரசாங்க அதிபர் தொடக்கம் சாதாரண உத்தியோகத்தர் வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். 

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் முட்டி மோதி எதிர்த்துக் கொண்டு நாங்கள் தீர்வுகாண முடியாது. நாங்களும் அரசாங்கத்தோடு இணைந்துதான் எங்களுடைய நிலைமைகளை விளங்கப்படுத்தி இவ்வாறான பிரைச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

அந்தவகையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களோடு இணைந்து செயற்படக் கூடிய ஒரு சில முஸ்லிம் தலைமைத்துவங்களையாவது நாங்கள் தெரிவு செய்தாக வேண்டும். 

இது மொத்த முஸ்லிம்களதும் கடமை. அந்த விடயத்தை சொல்லுவது எனது கடமை அதை தீர்மானிப்பதும், வாக்களிப்பது மக்களாகிய உங்களின் கைகளில்தான் உள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தோடு தொடர்புடைய கட்சிகள் வெற்றி பெறுவதனூடாக அரசாங்கத்துடன் இணைந்து எங்களுடைய ஆபத்துக்களை தடுக்கின்ற நிலைமையை நாங்கள் எதிர்பார்க்க முடியாது என்றார்.

No comments: