நடளவிய ரீதியில் அமுல்படுத்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புக்கள்


நேற்று இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது சனிக்கிழமை 06ம் திகதி காலை 04 மணி வரை அமுலில் இருக்கும்.

04 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரையில் தினமும் இரவு 10 மணி தொடக்கம் மறு நாள் காலை 04 மணிவரை அமுல்படுத்தப்படும்.

இந் நிலையில் இன்று அரச விடமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் நாளான 06ம் திகதி சனிக்கிழைமை நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்கமுடியாத காரணத்தினால் தபால் நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று 24 மணி நேர சோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது இதன் போது தடைகள் போடப்படுவதுடன் பயணிப்பர்களது அனுமதி பத்திரங்களும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

No comments: