"யுனிசெவ்" அனுசரணையில் கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டம்


(காரைதீவு நிருபர் சகா)

கொரோனா தொற்றினை ஒழிக்கும் செயற்முறை திட்டங்கள் பல  நாட்டில் முன்னெடுத்து செல்லப்படுகின்றது.


அந்தவகையில்  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக UNICEF நிறுவனத்தின் நிதி உதவியுடன் ceri நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அம்பாறை கல்முனை பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

இதனடிப்படையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை ,கல்முனை போலிஸ் நிலையம் , கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகிய இடங்களுக்கு  கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரியினால் கை களுவும் இயந்திங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: