மறுப்பு தெரிவிக்கும் தேர்தல் ஆணைக்குழு


வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடும் 6 இயந்திரங்களில் 5 இயந்திரங்ள் மூலமாக வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நடை பெறுகின்றது.

இதன் போது மாவட்டமொன்றின் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பற்றி கணக்கெடுப்பில் சிக்கல் நிலை தோன்றவே இதனை பரிசீலனை செய்வதற்காக அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட பணிகள் தொடர்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை 6 மாவட்டங்களிற்கான வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவடையும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


No comments: