அனுஷா சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார ? விளக்கும் இராதாகிருஷ்ணன்


(கேதீஸ்)
மலையக மக்கள் முன்னணியிலிருந்து அனுஷா சந்திரசேகரனை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் மத்திய குழு ஏகமானதாகவே தீர்மானித்தது எதிர்வரும் பொதுத்தேர்தலில் இவர் சுயேட்சையாக போட்டியிடுவதனாலேயே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாரென முன்னாள் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

ஒருவரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கிவிட முடியாது. மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்.

ஒரு கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு இன்னொரு கட்சியில் தேர்தலில் போட்டியிடுவது கட்சியின் கொள்கையை மீறும் செயல். 

எனவே இவர் கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டமைக்கு விளக்கம் கோரி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூடி கட்சியின் தலைமை கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியது. 

அனுஷா சந்திரசேகரனை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கவில்லை. இவர் கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டமையால் தற்காலிகமாகவே கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மலையக மக்கள் முன்னணியில் ஏற்ப்பட்ட பிரதி செயலாளர் நாயகம் பதவி வெற்றிடத்திற்கு கட்சியின் மத்திய குழுவினால் மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் நாயகமாக பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

No comments: