சிறுவர் இல்லங்கள் தொடர்பில் -வடிவேல் பரமசிங்கம்


(காரைதீவு சகா)

கொவிட் 19 கொரோனாப் பரவலின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஆறு இல்லங்கள் மாத்திரமே இயங்குநிலையிலிருப்பதாகவும் நான்கு இல்லங்கள் இயக்கமற்று இருப்பதாகவும் ஜனாதிபதி கொவிட்19 இல்லங்களுக்கான செயலணிக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வடிவேல் பரமசிங்கம் தெரிவித்தார்.

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லம் அக்கரைப்பற்று விபுலாநந்த சிறுவர் இல்லம் கோளாவில் அம்மன் இல்லம் தெஹியத்தக்கண்டிய இந்திசார சிறுவர் இல்லங்கள் ஆகிய நான்கு சிறுவர் இல்லங்கள் பல வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கிவருகின்றன.

இதேவேளை அம்பாறை சரண முதியோர் இல்லம் தெஹியத்தக்கண்டிய சரண முதியோர் இல்லம் ஆகிய இரண்டு முதியோர் இல்லங்கள் மாத்திரமே இயங்குநிலையிலுள்ளன.

இந்த ஆறு இல்லங்களுமே சமகாலத்தில் உதவித்திட்டங்களை உள்வாங்கும் நிலையிலுள்ளன.

இவற்றுக்கு ஒருதொகுதி நிவாரணப்பொதிகளை வழங்க யுஎஸ் எயிட் அமைப்பின்கீழ் ஜடியா செயற்றிட்டத்தின்கீழ் மனித எழுச்சி அமையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க கல்முனையிலுள்ள சென்.மேரீஸ் ஜீசஸ் லிற்றில் பிளவர் பெரியநீலாவணை ஹேமாஸ் ஆகிய 4 சிறுவர் இல்லங்கள் கொரோனா காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அங்கிருந்த சிறுவர்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தத்தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொரோனா தாக்கத்திலிருந்து நாடு இaல்புநிலைக்குத் திரும்பியபிற்பாடு இவ்வில்லங்கள் இயங்க ஆரம்பிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

No comments: