ஹட்டன் மஸ்கெலியா மக்கள் கண்ணிருடனும் வேதனையோடும் வாழுகின்றனர்


(சதீஸ்)

ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பகுதியில் உள்ள மக்கள் கண்ணிருடனும்
வேதனையோடும் வாழுகின்ற ஒரு சனசமுகமாக நாம் கருதுவதாக வடமாகண முன்னாள் அளுனர் சுரேன்ராகவன் தெரிவித்துள்ளார்.

இன்று ஹட்டன் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

இதுபோன்ற நிலமை மாறவேண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு தேசியகட்சி அது உலக அளவில் பேசகூடிய கட்சி அதன் காரணமாகத்தான் எமது கட்சியின் பொதுச்சயலாளர் தயாசிறீ ஜயசேகர வுடய தலைமையிலும் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்களின் தலமையின் கிழும் இந்த கட்சியினை வளர்தெடுத்து இந்த நாட்டுக்கும் இந்த மக்களுக்கும் ஜனநாயக பாதையினை உருவாக்குவதற்கு முன்வரவேண்டும்.

ஹட்டன் மஸ்கெலியா நுவரெலியா போன்ற பகுதிகளில் இன்னும் இருநூறு
வருடங்களுக்கு பிறகும் முதன் முறையில் தேயிலை தோட்டத்தில்
வேலைசெய்வதற்காக 1826ம் ஆண்டு இந்தியாவின் தமிழ் நாடான இராமநாதன் புறத்தில் இருந்து அழைத்துவர பட்டனர் அன்று முதல் இன்று வரை இந்த மலையக மக்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர் .என குறிப்பிட்டார்

No comments: