பெண்ணொருவர் மரணம் கணவன் கைது


(கனகராசா சரவணன்)

மனைவியின் கழுத்தை கயிற்றால் திருகியதால் மனைவி உயிரிழந்து ள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (03) மாலை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீதியைச் சேர்ந்த (24) வயதுடைய அப்துல் காதர் ஷியாமியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே சம்பவதினமான இன்று புதன்கிழமை (03) பிற்பகல் சுமார் (3) மணியளவில் ஏற்பட்ட வாய்த்தர்கம்; முற்றிய நிலையில் மனைவியின் கழுத்தை கணவன் கயிற்றால் திருகியதனால் மனைவி உயிரிழந்துள்ளர். என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து (27) வயதுடைய ஹலால் என்ற கணவனை கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா iவாத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: