கவனிப்பாரற்ற நிலையில் வீதியில் பழுதடைந்த நிலையில் கனரக வானகம்


(ஏ.ஆர்.எம்.றிபாஸ்)


க மூன்று நாட்களாக கிண்ணியா மகாத் நகர் பிரதான வீதியின் நடுவில் பழுதடைந்து காணப்படும் டிப்பர் வாகனத்தினால் போக்குவரத்து செய்யும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்

மேலும் குறித்த இவ் வாகனம்  பிரதேச சபை தவிசாளரின் வீட்டுக்கு முன்னால் உள்ள நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதியினூடாக இரவு வேளைகளில் பிரயாணம் செய்யும் மக்கள் விபத்துக்கு உள்ளாக நேரிடுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

வாகன உரிமையாளர் வாகனத்தை ஓரமாக்குதற்கு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

வீதியிலிருந்து வாகனத்தை அகற்றுவதற்கு
வாகன உரிமையாளர் மற்றும் உரிய அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டுகின்றனர்

No comments: