ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றவும் இல்லயேல் அனுமதி ரத்து


சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பஸ் போக்குவரத்தை முன்னெடுக்கப்படவேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத, பேருந்துக்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை சுற்றிவளைப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் போக்குவரத்திற்கு தேவையான பஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பஸ்களையும் போக்குவரத்தில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையில் 3500 பஸ்கள் காத்திருப்பு பட்டியலில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது

No comments: