ஹட்டனில் மோட்டார் சைக்கில் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்து


(எஸ்.சதீஸ்)

கொட்டகலையில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால் சென்ற டிப்பர் வண்டியினை முந்தி கொண்டு செல்லமுற்பட்ட வேலையில் மோட்டார் சைக்கில் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மோட்டார் சைக்கிலில் பின்னால் அமர்ந்து சென்ற தந்தையாரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

No comments: