மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி.


(எச்.எம்.எம்.பர்ஸான்)

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவன் சிறிய ரக பட்டா வாகனம் ஒன்றுடன் மோதி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை பிரதான வீதியால் இன்று (3) மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் அவ்வீதியால் சென்ற சிறிய ரக பட்டா வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மரணமடைந்த இளைஞன் வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய குறுக்கு வீதியைச் சேர்ந்த அப்துல் நாசர் நைரூஸ் வயது (18) என்பவராவார்.

மரணமடைந்த இளைஞனின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: