வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய இருவர்


(நீலமேகம் பிரசாந்த்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கொடை யொக்ஸ்பொர்ட் தோட்டத்தில் இரு தோட்டத்தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இழக்காகி வட்டக்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

08/06/2020 திங்கட்கிழமையன்று காலை தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் போது காலை 8.30 மணியளவில் மரத்திலிருந்த குளவிக்கூடு திடிரென கலைந்து தொழிலாளர்களை தாக்க முற்பட்டுள்ளது .

இதில் 2 தொழிலாளர்கள் முற்றாக குளவிதாக்குதலுக்கு உட்பட்டு வட்டக்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments: