உடைந்த சட்டிபானையை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் -.சதாசிவம்.


(சதீஸ்)

எதிர்வரும் பொதுதேர்தலில் உடைந்த சட்டிபானையை நம்பி மக்கள் ஏமார
மாட்டார்கள் என்கிறார் இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம்.

எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் இடம்பெறவிருக்கின்ற பொதுதேர்தலில் நுவரெலியா மாவட்டமக்கள் ஜக்கிய தேசிய கட்சியின் யானைசின்னத்திற்கோ அல்லது ஜக்கிய மக்கள் சக்தி கட்சியான சஜித்பிரேமேதாசாவிற்கோ இம்முறை மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் ஏன் எனில் மலையக மக்கள் உடைந்த சட்டிபானையை நம்பி ஏமாற மாட்டார்கள் என இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணியின் தலைவரும்
நுவரெலியா மாவட்டத்தின் மொட்டு சின்ன வேட்பாளருமான் எஸ் சதாசிவம்
தெரிவித்தார் 17.06.2020.புதன்கிழமை பொகவந்தலாவ கட்சி காரியாலயத்தில்
தோட்ட தொழிற்சங்க தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட வேட்பாளர்
எஸ்.சதாசிவம் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் மலரவிருக்கின்ற மொட்டு சின்னத்திற்கே நுரெலியா மக்கள் வாக்களிப்பார்கள் இன்று நாட்டில்
ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மக்கள் தெழிவாக இருக்கிறார்கள் ஆகவே நுவரெலியாமாவட்டத்தில் நாம் அமோகவெற்றிபெருவோம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் அடிப்படை சம்பளம் என்ற கோறிக்கை நியாயமான சம்பளம் இந்த ஆயிரம் ருபாய் சம்பள விடயத்தில் அரசாங்கம் முலமையான பங்களிப்பை வழங்கவேண்டும் பெருந்தோட்ட நிருவனங்களும் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை வழங்கபட வேண்டும் இதனை வைத்து கொண்டு பெருந்தோட்ட நிருவனங்கள் தொழிலாளர்களை தினந்தோரும் ஏமாற்றி கொண்டு
செல்லாமல் ஆயிரம் ருபாய் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கபட வேண்டும் இதற்கான நடவடிக்கையினை நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள் எனவே வெகுவிரைவில் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆயிரம் ருபாய் சம்பளம் தொழிலாளர்களுக்கு
கிடைக்கும்

அன்மையில் தலவாகலை சென்கூம்ஸ் தோட்டபகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிர்ழந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிர்ழந்த சம்பவத்தை நான் அறிவேன் அது மாத்திரமன்று மஸ்கெலியா வைத்தியசாலையில் கானப்படுகின்ற குளவி கூடுகள்
மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர் தொழில்புறிக்கின்ற தேயிலை மரங்களில் கானப்படுகின்ற குளவி கூடுகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பில் பெருந்தோட்ட கைதொழில் அமைச்சரோடு கலந்துறையாடி இதனை எவ்வாறு அகற்றுவது குறித்து
நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார்

No comments: