இன்று உலக கடல் தினம்


ஜனதிபதியின் செய்தி

கடல்தான் மனித குல பரிணாம வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாகும். இந்த பூலோகம் - 70 வீதம் கடல் நீரால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

எனவே, சமுத்திரங்களினதும், மற்றும் பெரும் மற்றும் சிறுகடல்களினதும் இயற்கைப் பொறிமுறையைப் பாதுகாக்க வேண்டியது - மனித வர்க்கம் இந்த உலகில் நிலைத்து நிற்பதற்கான ஓர் அடிப்படைத் தேவையும், மனுக் குலத்தின் கடமையும் ஆகும்.

மனித செயல்பாடுகளினால், அழிந்துவிடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கடலின் இயற்கைப் பொறிமுறைச் சூழமைவைப் பாதுகாக்க நான் உறுதிபூடுள்ளேன்.

எனது ‘செழிப்பு மிக்க தொலை நோக்கு’ என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப  இலங்கையைச் சுற்றியுள்ள சமுத்திரத்தினைப் பாதுகாக்கவும் அதனை மேலும் ஆய்வு செய்து அதன் மகிமைகளைக் கண்டறியவும் நான் எதிர்பார்த்திருக்கின்றேன்.”


No comments: