மது அருந்திய இளைஞன் உயிரிழப்பு


மரு அருந்தி விட்டு நீராடச் சென்ற இளைஞன் பலியாகிய சம்பவம் கல்கிஸ பகுதியில் பதிவாகியுள்ளது.

பாடசாலை நண்பர்களுடன் மேற் குறித்த பிரதேசத்தில் உள்ள வாய்க்கால் ஒன்றில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் 24 வயது மதிக்கத்தக்க இளைஞன்.

இதன் போது இவர்கள் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறிந்த நண்பர்களில் இருவர் நீராட வாய்க்காலில் இறங்கிய போது நீரால் அடித்துச் செல்லப்பட்ட வேளை மேலிருந்த நண்பர்களால் ஒருவரை மாத்திரமே காப்பாற்ற முடிந்துள்ளது.

குறித்த பகுதியில் பலர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும் குறித்த நபரின் சடலம் 10 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டதாவும் பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

No comments: