வடிவேல் சுரேஸ் தொடர்பில் இன்று வெளியாகிய நீதிமன்ற தீர்ப்பு


(நீலமேகம் பிரசாந்த்)

இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காத வண்ணம் ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சங்கத்தின் தலைவராக காணப்பட்ட ஹரின் பெர்ணான்டோவையும், பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷையும் பதவியிலிருந்து தூக்கி தலைவராக நவீன் திஸாநாயக்கவையும் பொதுச்செயலாளராக யோகராஜனையும் ஐ.தே.கா நியமித்தது.

இந்நிலையில் ஐ.தே.கவினால் வடிவேல் சுரேஸ் மற்றும் ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி மீண்டும் தலைவராக ஹரின் பெர்ணான்டோவும் செயலாளராக வடிவேல் சுரேஸ் இருவரும் பதவி வகிக்கலாம் எனவும் தீர்பளிக்கப்பட்டது.

இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் காசோலையில் கையொப்பமிடல் மற்றும் மக்களுகான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கலாமெனவும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 24/06/2020 புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது என வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

No comments: