நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து வாக்குமூலம் வழங்கத் தயார் - தவிசாளர் ஜெயசிறில்


கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது அறிக்கையொன்றில் கருணா கொரோனாவை விட கொடியவன் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அம்பாறை நாவிதன் வெளி பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பரப்புரையின் போது தான் கொரோனாவை விட கொடியவன் தான் ஆனையிறவிர் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் என்று கூறியிருந்தார்.

இக் கருத்து பலரது எதிர்ப்பினை சம்பாதித்துள்ளதுடன் கருணா அம்மான் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் காரைதீவு தவிசாரளையும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் அம்பாறை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்லுடன் நாம் தொடர்பு கொண்டு வினவியபோது.

கருணாவின் சர்ச்சைக்குள்ளான கருத்து தொடர்பில் என்னையும் விசாரணைக்கான அழைக்கவிருப்பதாக  அறிந்து கொண்டேன்.

ஜனநாயக  நாட்டில் ஒரு தவிசாளராகிய எனக்கு பாதுகாப்பளிக்காமல் இவ்வாறு விசாரணைக்கு அழைப்பதாக தெரிவித்திருப்பது தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஜனநாயக  நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாக்குமூலம் வழங்க தான் தயார் என்றும்  குறிப்பிட்டார்.


No comments: