அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு தொடர்பிலான செய்தி


நிதிப்பற்றாக்குறை காரணமாக அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டுள்ளது.

மாகாணசபைக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு வழங்குவதில்  சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்களால்  மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையினால் அதிகம் பாதிக்கப்படுவது சுகாதார ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக நேர மொத்த தொகை அறிக்கை கிடைத்தவுடன் திறைசேறியில் இருந்து நிதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments: