எடின்ப்ரோ மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயற்பாடு


(நீலமேகம் பிரசாந்த்)

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானூயா நகரில் இயங்கிவரும் ஹாட்வெயார் கடையொன்றினால் மக்கள் பாரிய அசௌகரியத்தை முன்னெடுத்து வருவதாக எடின்ப்ரோ தோட்ட மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


நானூயா நகரிலிருந்து எடின்ப்ரோ தோட்டத்திற்கு செல்லும் நடைபாதையில் ஹாட்வெயார் கடையொன்றில் மணல் மற்றும் சீமெந்து கற்களை கொட்டி நடைபாதைசாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக குறித்த தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதாவது குறித்த கடையில் பாரிய வாகனங்களை கொண்டு பாதையை மறிப்பதால் ஏனைய வாகனங்கள் தோட்டத்தினுள் உள்நுழைவதில்லை.

உள்நுழைய முற்பட்டாலும் தேவையில்லாத பிரச்சனையை கடை உரிமையாளர் முன்னெடுக்கின்றார்.அதேபோல வடிகாண்களை மறைத்துள்ளதால் வடிகாண்களில் வரும் கழிவுகள் பாதைக்கு சென்று அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றதாவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மணல்,சீமெந்து கற்களை கொண்டுவந்து பாதையில் கொட்டுவதால் அதன் தூசுகள் அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்கின்றதாகவும் உணவு, உடை என அனைத்திலும் படிந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு எடின்ப்ரோ மற்றும் குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


No comments: