முந்திகொண்டு செல்லமுற்பட்ட பேருந்து இரண்டு மோதுண்டதில் போக்குவரத்து தடை


(எஸ்.சதீஸ்)

கண்டியில் இருந்து ஹட்டன் பகுதியினை நோக்கி பயனித்த தனியார் பேருந்தினை கினிகத்தேனையில் இருந்து ஹட்டன் நோக்கிவந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தனியார் பேருந்தினை முந்திகொண்டு செல்லமுற்பட்ட வேளையில் இரண்டு பேருந்துகளும் மோதுண்டத்தில் பேருந்தில் பயணித்த எவ்விதகாயங்களும் எற்படவில்லையென ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்இந்தசம்பவம்  இன்று  சனிகிழமை காலை 08 மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்
.
இரண்டு பேருந்துகளும் முந்திகொண்டு செல்லமுற்பட்ட வேலையில் இரண்டு பேருந்துகளும் மோதுண்டத்தில் ஹட்டன் நுவரெலியா ஹட்டன் கண்டி ஹட்டன் கொழும்பு ஆகிய வீதிகளின் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கபட்டிருந்த வேலையில் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

 இதேவேலை குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேருந்தின் சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடருவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

No comments: