சட்டவிரோத மதுபான போதல்களுடன் இருவர் கைது


(சதீஸ்)

நோட்டன் பிரீஜ் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோட்டன் லக்ஸபான மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை நோட்டன் பிரீஜ்பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 07.06.2020.ஞாயிற்றுகிழமை மாலை வேலையில் இந்த கைது இடம்பெற்றதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

நோட்டன் பிரீஜ்பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியதகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது லக்ஸபான பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஏழு லீற்றர் கோடா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரனங்கள் என்பவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பொலிஸாரினால் பினைவழங்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் புதன்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்ட்டன் பிரீஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடதக்கது.No comments: