பாடசாலைகளுக்கான விசேட சுற்றிக்கை

105 நாட்களுக்குப் பின்னர் நேற்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது இருப்பினும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந் நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது மாணவ சமூகத்தை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து வைரஸ் பரவலை தடுப்பதற்கு பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை தயார்படுத்துவதற்கான சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டல் கையேடு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் FHB/SHU/COVID/2020 ஆம் இலக்க கொவிட் 19 தொற்றின் பரவலை தடுப்பதற்கு பாடசாலை வளாகத்தில் இருக்க வேண்டிய தயார்நிலை தொடர்பான வழிகாட்டலுக்கு இணைவாக சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் 29 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த கையேட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் படங்களுடன் காட்சிப்படுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறித்த வழிகாட்டல் கையேட்டினை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகம் அதன் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: