ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதி நியமனம்


(கேதீஸ்)


பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக குமார் துரைராஜசிங்கம் இன்று (10.6.2020) கடமைப் பொறுப்பேற்றார்.

இந்தக் கலாசாலையில் இதுவரை பீடாதிபதியாக இருந்த ரமணி அபேநாயக்க வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரிக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து, புதிய பீடாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் 9 வது பீடாதிபதி இவராவார். 

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று நடைபெற்ற பதியேற்பு, பதவி கையளிப்பு நிகழ்வில், கலாசாலையின் புதிய பீடாதிபதி குமார் துரைராஜசிங்கம், முன்னாள் பீடாதிபதி ரமணி அபேநாயக்க உட்பட கலாசாலை அலுவலர்களும் கலந்துகொண்டனர். 

புதிய பீடாதிபதி, இதற்கு முன்னர் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியாகவும் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: