மஸ்கொலியாவில் விபத்தில் இளைஞன் பலி


(சதீஸ்)

தனது அக்காவின் திருமணத்திற்கு பினர் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை முன்னெடுக்கச் சென்ற இளைஞன் விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் மஸ்கெலியாவில் பதிவாகியுள்ளது.

தனமு சொந்த ஊரான மஸ்கெலியா புரஸ்விக் இரானி தோட்டபகுதிக்கு மோட்டார் வண்டியில் வந்த இளைஞன் மஸ்கெலியா காட்மோர் ரோஸ்பில்ட் பகுதியில் அமைக்கபட்டிருந்த கொங்ரீட் தூன் ஒன்றில் மேதுண்டு பலத்த காயங்களோடு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது குறித்த இளைஞன் உயிர்ழந்துள்ளதாக மஸ்கெலியாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிலில் காட்மோர் ரோஸ்பில்ட் தோட்டத்தில் இருந்து இரானி தோட்டத்திற்கு செல்வுதற்காக வந்த போது வேக கட்டுபாட்டினை இழந்து வீதி ஒரமாக பொருத்தபட்ட தூன் ஒன்றில் தலைபகுதி மோதுண்டதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது 

குறித்த நபர்  தலைகவசம் அனிந்திருக்கவில்லையெனவும் சம்பவத்தில் உயிர்ழந்த இளைஞன் மஸ்கெலியா புரன்விக் இரானிதோட்டத்தை சேர்ந்த 20வயதுடைய ராஜ்குமார் சுமன் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இளைஞனின் சடலம் டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுளள்தோடு ஹட்டன் நீதவானின் தலைமையிலான மரண விசாரனைகள் இடம்பெற்றவுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்படுமென பொலிஸார் தெரிவித்தனர் .


No comments: