சிறந்த வழிகாட்யே சிறந்த தலைமைத்துவம் -ஜீவன்


(எஸ்.சதீஸ்)

மக்கள் சிறந்தவழிகாட்டியாக இருந்தால் மாத்திரமே மலையகத்திற்கான ஒரு சிறந்த தலமைதுவத்தை உருவாக்க முடியும் நாவலபிட்டியில் ஜீவன்

மக்கள் சிறந்தவழிகாட்டியாக இருந்தால் மாத்திரமே தான் மலையகத்திற்கு ஒரு சிறந்ததலமை துவத்தை எதிர்வரும் காலங்களில் உருவாக்கமுடியும் அதுமட்டுமின்றி மக்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்ரஸிற்கும் உள்ள தொடர்பு ஒரு உறவு முறையிலான பாலமாக இருக்கபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் 

இன்று  சனிகிழமை நாவலபிட்டி அமிக்கோமண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட கண்டிமாவட்ட வேட்பாளர் அருள்சாமி பரத் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவர்களில் ஒருவருமான மதியுகராஜா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது தொடர்ந்தும் உறையாற்றிய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எமது கட்சியின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 24ம் திகதிக்கு பிறகு ஆறம்பிக்கப்படும் நான் அரசியலுக்கு வந்து மூன்று வருடகாலமே ஆகிறது அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஒரு தேசிய தலைவர் எமது கட்சி தேசியகட்சி ஆனால் சிலர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை சுற்றி உள்ளவர்கள் நுவரெலியா மாவட்டத்தை சுற்றி மாத்திரமே வைத்துள்ளார்கள் இனிமேல் அவ்வாறு இருக்கமுடியாது பரந்தளவில் நாம் பலத்தை வெளிபடுத்த வேண்டும்

நாம் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமல்ல கண்டி பதுளை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகிறோம் எதிர்வரும் ஜந்து வருடகாலப்பகுதியில் ஒரு பாரிய மாற்றத்தினை கொண்டுவருவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது நாம் நேற்றய தினம் இலங்கை நாட்டுக்கான இந்திய துதுவரை நாம் சந்தித்து பல்வேறு கோறிக்கைகளை வைத்துள்ளோம் 

மலையகத்தை பொருத்தவரையில் தொழில்வாய்ப்பு குறைவாகவே கானப்படுகிறது இதனால் நாம் பொருலாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தமது கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ள அநேகமான மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கான வசதிகள் குறைவாக கானப்படும் பட்சத்தில் அவர்கள் வருவதை இடைநிருத்தி கொள்கிறார்கள் ஆகவேதான் நான் கூறுகிறேன் கண்டியில் கட்டாயம் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தினை அமைக்கவேண்டும்.

அவ்வாறு கண்டி பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கும் போது படித்த இளைஞர்யுவதிகளுக்கு தொழில்வாய்பினை பெற்று கொள்ளமுடியும் நாம் இம்முறை கண்டி மாவட்டத்திற்கு ஒரு வேட்பாளரை களமிறக்கியுள்ளோம் நாம் எம்முடய பலத்தினை கான்பித்தால் ஒரு பிரதிநிதிக்கு பதிலாக இரண்டு பேரை நாம் உருவாக்கமுடியும் கண்டிபகுதியில் தோட்டங்கள் கானப்பட்டாலும்

 அங்கு அதிகமான பிரச்சினைகள் கானப்படுகிறது இனிவரும் காலங்களில் மக்கலாள் தெரிவுசெய்யபடும் பிரதி நிதி ஊடாக கண்டிமாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுப்போம் என குறிப்பிட்டார்.

No comments: