வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம் | நாளை தீர்மானம்!..


தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று கிடைத்ததன் பின்னர் தேர்தல் தொடர்பில் நாட்டில் பல எதிர்பார்ப்புக்கள் கிளம்பியுள்ளது.

தேர்தல் குறித்து நாளை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் இன்று அறிவித்துள்ள நிலையில் 2020 பொதுத்தேர்தல் மீதான் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதே வேளை அச்சு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் நாளைய தினம் முதல் வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையிவ் ஒருகோடி 17 இலட்சம் வாக்கு சீட்டுகள் அச்சிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் சஜித் பிறேமதாச தலைமையில் ஜக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடலொன்றினை பத்தரமுல்லையில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: