குளவிகொட்டுக்கு இலக்காகி ஆறுபேர் வைத்தியசாலையில் அனுமதி.


(சதீஸ்)

பொகவந்தலாவ ஓல்டி மேற்பிரிவு தோட்டபகுதியில் உள்ள சிருவர்
நிலையத்திற்குள் குளவி உட்புகுந்தமையினால் சிருவர் நிலையத்தில் இருந்த
மூன்று சிருவர்களும் குளவி தாக்குதலுக்கு உள்ள சிருவர்களை காப்பாற்ற
சென்று மேலும் மூன்று பேர் உட்பட ஆறுபேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தசம்பவம் 02.06.2020.செவ்வாய்கிழமை பிற்பகல் 12 மணியளவில்
இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் சிருவர் நிலையத்திற் அருகாமையில் இருந்த குளவி கூட்டை களுகு ஒன்று மோதுண்டமையினாலே குளவி கலைந்து சிருவர் நிலையத்திற்குள் உட்புகுந்து சிருவர்களை தாக்கியுள்ளதாக
தெரிவிக்கபடுகிறது.

காயங்களுக்கு உள்ளானவர்களுள் மூன்று சிருவர்கள் இரண்டு ஆண் ஒரு பெண் ஆகியோரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயங்களுக்கு உள்ளானவர்கள் குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லையெ வைத்தியசாலையின்
பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments: