உயர்தரம் செல்லமுடியாத மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


தேசிய தொழிற் தகைமை பாட நெறியூடாக தரம் 12 ம் (உயர்தரத்தின்)  பிரிவிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்கப்படுவதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் இதன் மூலம் தெரிவுசெய்யப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில்  423 பாடசாலைகளில் மாணவர்கள் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் மணவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

உடற்கல்வி மற்றும் விளையாட்டு மற்றும்  கைவினை கலை, உள்ளக வடிவமைப்பு, அரங்கற்கலை, குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு, மேலும்  பெருந்தோட்ட பயிர்ச்செய்கை உற்பத்தி தொழில்நுட்பக் கல்வி மற்றும் கிராபிக் வடிவமைப்பு ஆனியன உள்ளிட்ட 26 பாடநெறிகள் அடங்குகின்றன.

தங்களுக்கு ஏற்ற பாடசாலை தெரிவு மேற்கொள்ளுமு் சந்தர்ப்பமும் மாணவர்களுக்கு உள்ளதாக  கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து  இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 

No comments: