ஆறுமுகன் தொண்டமானின் சிலை வைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றம்


(சதீஸ்)

இன்று 9ஆம் திகதி நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு மறைந்த தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் அவையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது. 

மேலும் அவர் சில பிரேரணைகளை இன்று சபைக்கு முன்வைத்தார். அதாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் உருவ சிலையை நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதான நகரான நானு ஓயா நகரின் பகுதியில் அமைக்க நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அமைக்க இன்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் பல முக்கிய பிரேரணைகள் சபையில் இன்று பிரேரிக்கப்பட்டு சபை இனிதே நிறைவு பெற்றது.

UPDATED
(நீலமேகம் பிரசாந்த்)

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானூயா நகரில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சிலை வைப்பதற்கான பிரேரணை நுவரெலியா பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.

இன்று 9ஆம் நுவரெலியா மாதந்த கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .பின்பு நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலுயோகராஜ் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சிலை ஒன்றை நானூயா நகரில் வைக்க பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு அதனை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதோடு ஆதரவளித்து பிரேரடை நிறைவேற்றப்பட்டது நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக சபை தலைவர் வேலு யோகராஜ் குறிப்பிட்டபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஒரு பலமிக்க சக்தியாக சர்வதேச ரீதியாக கொண்டு சென்றவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். மேலும் மலையகத்தின் நிராகரிக்க முடியாத தலைவராக செற்பட்டவர்.

 எனவே அவரின் நினைவு என்று மக்கள் மனதில் இருப்பதோடு அந்நினைவுகளுக்கு உருவம் கொடுக்கும் வகையில் நானூயா நகரில் சிலை வைக்க பிரதேச சபையூடாக பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றவும் பட்டுள்ளது.எனவே வெகு சீக்கிரத்தில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுமென நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் குறிப்பிட்டார்.No comments: