மீண்டும் பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஸ் தெரிவுச்செய்யப்பட்டார்


(நீலமேகம் பிரசாந்த்)

(18.06.2020) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக்காரியாலயமான தொழிலாளர் இல்லத்தில் அச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் உத்தியோகபூர்வமாக ஒன்றுகூட்டப்பட்டிருந்தது.

அக் கூட்டத்திற்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்களும் செயற்குழு உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து இச் செயற்குழு கூட்டம் இடம்பெற்றது.

‌இதன்போது முதன்முறையாக ஓர் உயரிய சபையான செயற்குழு ஒன்றுகூடலுக்கு பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் தலைமை வகிப்பது முதல் தடவையாகும். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரிண் பெர்ணான்டோ ஆலோசனையின் பெயரிலும் பதுளை பிரதேச சபை உறுப்பினரும் தோட்டத்தொழிலாளியுமான திருமதி.தேன்மொழி அவர்களின் தலைமையிலே இச்செயற்குழு ஒன்றுகூடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

‌சங்கத்தின் யாப்பின் படி எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானங்ளுக்கும் செயற்குழு உறுப்பினர்களின் 1/3 பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகையும் தீர்மானங்களும் தேவை அந்த வகையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள இச் செயற்குழு கூட்டத்தில் 1/3 பெரும்பான்மைக்கும் அதிகமான செயற்குழு உறுப்பினர் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. இச் செயற்குழுவின் தீர்மானத்தின் பெயரிலே சங்கத்தின் தலைவராக ஹரின் பெர்ணான்டோவும்,பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஸ் ஏகமனதாகவும் சட்டபூர்வமாகவும் தெரிவு செய்துள்ளனர்.ஆகவே எந்தவொரு சூட்சும தந்திரங்களுக்கும் சட்டம் அடிபணியாது நீதியே வெல்லும் என்கின்ற உண்மையின் வெளிப்பாட்டை தற்போது அனைவரும் உணர்வார்கள் என நம்புகின்றேன்.

‌சங்கத்தின் தலைமைப் பதவிகளின் தீர்மானங்கள் மாத்திரமின்றி சங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கலந்துரையாடி சிறப்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.மேலும் யாப்பின் சட்டத்தை மீறி நடைபெற்ற சில கூட்டங்கள் பற்றிய வாத விவாதங்களும் இடம்பெற்றிருந்தது.அத்தோடு யாப்பை மீறியும் செயற்குழு தீர்மானம் அன்றியும் எந்தவொரு பதவிநியமனங்கள் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகள் இடம்பெறுவது உத்தியோகபூர்வமற்றது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனவும் வடிவேல் சுரேஸ் தெரிவித்திருந்தார்.

‌மேலும் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தேயிலைத் தாய் ஒருவரின் தலைமையில் உயரிய சபையான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் வரலாற்றில் தடம்பதிக்கக்கூடிய ஒரு விடயமாகும்.

No comments: