பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நடக்கப்போவது இதுதான்


(நீலமேகம் பிரசாந்த்)

பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நுவரெலியா மாவட்டம் த.மு.கூ வசம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஸ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் கடந்தகால அரசாங்கத்தின் போது அதிகமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது தமிழ் முற்போக்கு கூட்டணியே அதுமட்டுமல்லாது பிரதேச சபைகளை அதிகரித்தமையால் வட்டார அடிப்படையில் வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருகின்றன.

இதற்கெல்லாம் மூலக்காரணம் த.மு.கூ என்பதை எவராலும் மறுக்க முடியாது. எனவே மக்கள் யோசித்தே வாக்களிப்பர் அந்த அடிப்படையில் இம்முறையும் நுவரெலியா மாவட்டத்தை த.மு.கூ கைப்பற்றும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

No comments: