நோவூட் பகுதியில் தாயால் குத்தி கொலை செய்யப்பட்ட சிசு
(எஸ்.சதீஸ்)

நோர்வுட் ஜனபதய பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட சிசு கத்தியால் குத்தி கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக பிரேதபரீசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது

சிசுவின் உடம்பில் எட்டு இடத்தில் கத்திகுத்து காயங்கள் இருந்தாக வைத்திய நிபுணர்  ரத்நாயக்க தெரிவித்தார்

நோர்வுட் ஜனபதய பகுதியில் மானாதோப்பில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் தோண்டயெடுக்கப்பட்ட பிறந்த ஆண் சிசுவை ஈன்றெடுத்த தாய் குறித்த சுசுவை கத்தியால் குத்தி கொலை செய்து குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக பிரேத பரீசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது

தோண்டியெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் வைத்திய நிபுனர் இநோக்கா ரத்நாயக்கவின் தலைமையில் இடம் பெற்ற பிரேத பரீசோதனையின் போது குறித்த சிசுவின் உடற்பகுதியில் எட்டு இடத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும் சிசுவின் வயிற்று பகுதியில் ஜந்து கத்திகுத்து காயங்களும் கழுத்துபகுதியில் இரண்டு கத்துகுத்து காயங்களும் ஆண் சிசுவின் ஆண் உருப்பில் கத்தியால் குத்திய காயங்கல் உள்ளடங்கலாக எட்டு இடத்தில் குத்தி கொலை செய்து குழி தோண்டி சிசுவைவை புதைத்துள்ள தாக பிரேத பரீசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது

கடந்த 12ம் திகதி வெள்ளிகிழமை சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரினால் 119என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தொடர்பினை ஏற்படுத்தியமைக்கு அமைய நோர்வுட் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனையின் ஊடாக குறித்த சிசு புதைக்கப்பட்ட பகுதியினை நோர்வுட் பொலிஸார் இனங்கண்டனர் அதனை தொடர்ந்துசம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் சட்டவைத்திய அதிகாரி தடைவியல் பொலிஸார் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொண்டத்தில் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவானின் உத்தரவிற்கு அமைய சிசு தோண்டியெடுக்கப்பட்டது தோண்யெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடதக்கது

No comments: