ஜனாதிபதியின் கையெப்பதினை இட்டவர் கைது


ஜனாதிபதியின் கையெப்பதினை இட்ட நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளர் இது தொடர்பில் ஜனாதிபதி தனது உத்தியோ பூர்வ சமூகவலைத்தளத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

எனது கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாகப் பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இலக்கம் 531, சுந்தராபொல வீதி, யத்தன்பலாவ, குருணாகலை என்ற முகவரியில் வதியும் ஈ. எம். பீ. ஏ குமார என்பவரே அவர் ஆவார்.

பணித் தடைக்கு உள்ளாக்கப்பட்ட அவர் - சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பதவியுயர்வுகளுடன் மீண்டும் தன்னை சேவையில் அமர்த்துமாறு நான் எழுதியது போல குறிப்பிட்டு - எனது கடிதத் தலைப்பையும், எனது கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து - குமார என்பவரை வங்கி தலைமையகத்திற்கு அழைத்ததன் பின்னர், நேற்று அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேற்படி போலி ஆவணத்தை தயார் செய்வதற்குப் பயன்படுத்திய மடிக் கணினி மற்றும் ஏனைய உபகரணங்களும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: