நவீன் திசாநாயக்க உண்மை பேசமாட்டார் நான் பத்தாயிரம் வீடுகள் அமைதிருக்கிறேன் -திகா


(எஸ்.சதீஸ்)

நுவரெலியா மாவட்டத்தில் நான் இல்லாமல் ஜக்கிய தேசிய கட்சி ஒருபோதும்
வெற்றிபெறமுடியாதுயென தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சரும்  நுவரெலியாமாவட்ட  ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமானபழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார் 

இன்று வெள்ளிகிழமை ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

 கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒரு இட்சத்து 15ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றேன் ஆனால் இம்முறை தொலைபேசி சின்னத்தில்
போட்டியிடும் ஜக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில்
அமோகவெற்றிபெரும் மக்கள் இன்று தெழிவாக இருக்கிறார்கள் 

மக்களுக்கும் தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அண்ணன் கிரிகட் விளையாடுவதால் மலையக பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கிரிகட் விளையாடும் பந்தினையும் மட்டையையும் வழங்கி பொய்யான வதந்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர் 

அவர்கள்கள் தேர்தலில் வெற்றிபெறமுடியாது அவர் சென்று ஒவ்வரு தோட்டபுறங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டு பார்க்கவேண்டு நான்
அமைச்சராக இருந்த நான்கரை வருடங்களில் பத்தாயிரத்திற்கும் மேல் வீடுகளை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்து இருக்கின்றேன் 

நான் அமைத்து கொடுத்த வீடுகள் தரமான வீடுகள் தேர்தல்காலங்களில் வந்து மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கு இது போன்ற ஒரு வதந்திகளை பரப்பிவருகின்றனர். அவ்வாறு பொய்யான வதந்திகளை பரப்புபவர்களுக்கே ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி மக்கள் பாடம்புகட்டுவார்கள் 

அவ்வாறு கூறுபவர்கள் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் சொந்த இடங்களுக்கு சென்று விடுவார்கள் ஆனால் நாம் அப்படியல்ல எங்களுக்கு தொழிற்சங்கம் என்ற ஒன்று இருக்கிறது எங்களுக்கு வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள் ஆகையால் நாம் மக்களோடு மாத்திரமே
இருப்போம்

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுமே தொலைபேசி சின்னத்திற்கு வாக்களிக்க தயார் நிலையில் உள்ளார்கள் தேர்தல் நிறைவடைந்தபின்னர் அதற்கான பெருபேருகள் கிடைக்கும் 

நவீன் திஸாநாயக்க இம்முறை நுவரெலியா மாவட்டத்தில்
பாரிய தோல்வியினை சந்திக்க தயாராக இருக்கிறார் அவருக்கு தமிழ் மக்கள் சிங்களமக்கள் முஸ்லிம்மக்கள் எவருமே வாக்களிக்க தயாரக இல்லை

நவீன்திஸாநாயக்க என்பவர் ஒரு துறோகி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபடவிருந்த 50ருபாய் கொடுப்பணவை இல்லாமல் செய்தவர் நவீன் திஷாநாயக்கவிற்கு ஒரு போதும் தமிழ் மக்கள் எவரும் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் 

அவர் தோல்வியடைவதை தாங்கிகொள்ள முடியாமை பொய்யான வதந்திகளை பரப்பிவருகிறார் ஆனால் நாங்கள் புதியதொரு அரசாங்கத்தை உருவாக்குவமே தவிர தற்போதய உள்ள அரசாங்கத்தோடு நாம் இனையமாட்டோம் 

நவீன் திஷாநாயக்க என்பவர் என்றுமே உண்மையினை பேசமாட்டார் அவர் ஒரு கூறுவது எல்லாம் பொய் எனது மக்களுக்கு கிடைக்கவேண்டிய பணத்தை நான் என்றுமே வேண்டாமென்று கூறியது இல்லை

அமைச்சரவையில் குரல் கொடுத்து கோறிய அந்த பணத்தினை வைத்து கொண்டு மக்களுக்கு வழங்கமால் இருந்தது நவீன் என்பது அனைவரும் அறிந்த உண்மை இதனை யாராலும் மறுக்கமுடியாது . 

ஆயிரம் ருபாய் தொடர்பிலான பேச்சிவார்த்தை என்பது ஒரு நாடகம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்கள் தான் கூறியிருந்தார்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் பெற்றுதருவதாக இது தேர்தலுக்கான ஒரு நாடகத்தை இவர்கள் அரங்கேற்றி
வருவதாக அவர் குறிப்பிட்டார்.

No comments: