போக்குவரத்து தொடர்பில் விசேட அறிவிப்பு


நாளை முதல் கொழும்பிற்கு ஏனைய மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்து சங்கங்களின் தீர்மானத்திற்கு அமைய போக்குவரத்து நாளை செயற்படுத்தப்படவுள்ளது.

தொடருந்து (ரயில்) சேவைகளும் நாளை முதல் இயங்கவுள்ள நிலையில் அனைத்து தொடருந்துகளும் எதிர்வரும் நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதே வேளை  மேல்மாகாணத்தில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கு விதிமுறை நாளை மொறட்டுவை முதல் புறக்கோட்டைவரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காலை 06 முதல் 09 மணிவரையும் மீண்டும் 04 மணி முதல் இரவு 07 மணிவரையில் பேருந்துகளிற்கான முன்னுரிமை ஒழுங்கு விதிமுறை நடைமுறையில் இருக்கும்.

மேற் குறித்த காலப்பகுதியில் இலகுரக வாகனங்கள் பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது

No comments: