கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு ஈஸ்டல் தோட்ட மக்கள் போராட்டம்.


(நீலமேகம் பிரசாந்த்)நானூயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்செட் தோட்ட ஈஸ்டல் பிரிவில் கடந்த மாதம் 31ம் திகதி கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கெதிராகவும் தோட்டா வைத்தியசாலைக்கெதிராகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

 உயிரிழந்த குறித்த பெண் தோட்ட வைத்தியசாலையிலேயே பரிசோதனைகளை மேற்கொண்டதோடு குறித்த வைத்தியசாலையில் ஒழுங்கான மருத்துவ வசதி இல்லாத காரணத்தினாலும் கர்ப்பிணி பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தோட்ட நிர்வாகம் தோட்ட லொரியை வழங்காமையினாலுமே குறித்த பெண் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

எனவே இதற்கான தகுந்த காரணத்தை வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

No comments: