திகாமடுல்ல மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 540 பேர் களத்தில்


(காரைதீவு நிருபர் சகா)

எதிர்வரும்  2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஏழு ஆசனங்களைத் தெரிவுசெய்ய 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைக்கொண்ட மூவினங்களும் வாழ்ந்துவரும் அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக குறிப்பிடப்படுகின்றது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அரசியல்கட்சிகளை விட சுயேச்சைக்குழுக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. 

20 அரசியல் கட்சிகள் சார்பில் 200வேட்பாளர்களும் 34 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 340வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ஒவ்வொரு அணியின் சார்பில் 10 வேட்பாளர்கள் போட்டியிடும் வரையறை காணப்படுகின்றது.

மொத்தமாக போட்டியிடும் 540வேட்பாளர்களுள் 07பேருக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் அதிஸ்டம் கிடைக்கும். அவர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


No comments: