5000ம் ருபா கொடுப்பனவை பெற சென்ற மக்கள் விரட்டியடிக்கப்பட்டனரா ?


(சதீஸ்)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையினை கருத்தில் கொண்டு
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000ம் ருபா வாழ்வாதார பணத்தினை
பெறசென்ற மக்களை ஹட்டன் சமுர்தி வங்கியில் இருந்து சிலர்
விரட்டியடிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் இதனால் வாழ்வாதார கொடுப்பனவினை பெறசென்ற மக்களுக்கும் சமுர்தி உத்தியோகத்தருக்கும் இடையில் 19.06.2020.வெள்ளிகிழமை காலை அமைதியின்மையும் ஏற்பட்டது

வட்டவலை லொனக் புதுகாடு வெளிஒயா மேற்பிரிவு கிழ்பிரிவு அட்லிஸ் தண்டுகலா ஆகிய தோட்டமக்களை இந்த 5000ம் ருபா வாழ்வாதார கொடுப்பணவை பெற்று கொள்ள ஹட்டன் சமுர்தி வங்கிக்கு மக்களை வருமாறு கூறி அதற்கான இலக்கங்களும் வழகங்கப்பட்டபோதிலும் குறித்த கொடுப்பணவை மக்களுக்கு வழங்காது விரட்டியடிக்கபட்டதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாம் மூன்று முறைகள் வின்னப்பபடிவங்களை மீள்நிரப்பி வழங்கியுள்ளோம் ஆனால் எமக்கு இதுவரையிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கொடுப்பணவுகளை இதுவரை வழங்கமால் நாலை மற்றும் நாலை மறுதினம் வருமாறு எம்மை ஏமாற்றி வருகிறார்கள் ஒரு தோட்டபகுதியில் ஒரே குடும்பத்தில் ஜந்து மற்றும் ஆறு பேருக்கு இந்த கொடுப்பணவு வழங்கப்படுகிறது ஆனால் இந்த சமுர்தி உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு தேவைப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் வாழ்வாதார கொடுப்பணவு வழங்கப்படுகிறது

கொழும்பில் இருந்து வந்த நாங்கள் 14நாட்கள் தனிபடுத்தபட்டவர்கள் ஏன்
எமக்கு இந்த வாழ்வாதார கொடுப்பணவு வழங்கமுடியாது அனைவரையும் வருமாறு கூறுகிறார்கள் இங்கு வந்தபிறகு நால் ஒன்றுக்கு நூறு பேர்க்கு
மாத்திரம்தான் வழங்கமுடியும் என கூறுகிறார்கள் இது தொடர்பில் உறிய
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என மக்கள் குறிப்பிடுகின்றனர் .

இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் சமுர்தி வங்கியின் சமுர்தி உத்தியோகத்தர் காளியம்மாவை நாம் வினவினோம் நாம் தற்பொழுது இலக்கங்கள் வழங்கியுள்ளோம் வழங்கப்பட்ட இலக்கங்களின் அடிப்படையில் ஒரு நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு வழங்கியபிறகு இரண்டு நாட்கள் கடந்தவுடன் மற்றய நூறு பேருக்கு வழங்குவோம்
இந்த விடயம் மக்களுக்கு விளங்குவதில்லையென அவர் தெரிவித்தார்.
No comments: