நாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறிய 43 பேர் கைது


நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 42 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்

அமெரிக்க தூதரகம் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க முயன்ற நிலையில், அதனை தடுத்த பொலிஸார் செயற்பாட்டாளர்களைக் கைது செய்தனர்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்ட கைதுகளில் இரண்டு தேரர்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: