அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சங்கிலிய மன்னனின் 401 வது நினைவுதினம்


(யதுர்ஷன்)

(அனுமதியின்றி புகைப்படங்கள் எழுத்துக்களை திருடுவது குற்றமாகும்)

இலங்கையில் காணப்பட்ட மூன்று இராட்சியங்களில் தமிழர் இராட்சியமான யாழ்ப்பாண இராசதானியின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் 401 வது நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள 14 மாவட்டங்களில் இந்  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன அந்தவகையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் சங்கிலய மன்னனின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் பிண்ட வழிபாடுகள் இடம் பெற்று பிண்ணம் கடலில் கரைக்கப்பட்டது.

தமிழர்களை காலம் காலமாக எதிரிகளாகப் பார்க்கும் சிங்களவர்களின் துணையுடனும் தமிழினத்தின் சாபக்கேடாக விளங்கும் துரோகக் கும்பலின் ஆதரவுடனும் நவீன ஆயுதங்கள் தாங்கிய போர்த்துக்கீசரின் படை சங்கிலிய மன்னனின் மீது போர் தொடுக்க தமிழகத்தின் சில படைகளின் உதவியுடன் வெற்றி அல்லது வீர மரணம் என்று போர்த்துக்கேயரை போரில் வென்றார் சங்கிலிய மன்னன். 
 இருந்தும் சில துரோகிகளின் சதி செயல்களால் நிராயுதபாணியாக நின்ற சங்கிலிய மன்னன் போர்த்துக்கேயரால் கைது செய்யப்பட்டு இந்தியாவின் கோவா நகரில் வைத்து தூக்கிலிடப்பட்டார்.

No comments: