ஒரேநாளில் 38 பேர் பலி , 1974 பேருக்கு தொற்றுறுதி


தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியாகியுள்ளனர் இதுவே ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்ப வீதம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இறந்தவர்களில்  22 பேர் அரச மருத்துவமனைகளிலும்  16பேர் தனியார் மருத்துவமனைகளிலும் மேலதிக சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்கள் அதிக நாட்களாக மூச்சு திணறல் மற்றும் சீனி வியாதி, மூச்சு வியாதியால் அவஸ்தைப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகினறது.

தமிழகத்தில் நேற்று மாத்திரம் 1,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமானிலங்களில் இருந்தும் தமிழ் நாட்டிற்கு திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments: