நாடு திரும்பிய 291 பேர்


கொரோனா அச்சம் காரணமாக மாலைதீவில் நிர்கதியாகியிருந்ம 291 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கன் விமான வேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு பீ.சீஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டதன் பின்னர்விமானநிலையத்திற்கு அருகில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: