தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் 28வது பிறந்ததின கொண்டாட்டம்.


(எஸ்.சதீஸ்)

தலவாகலை பெருந்தோட்ட நிருவனத்தின் 28வது பிறந்த தின நிகழ்வு தலாவகலை லோகிதோட்ட நிர்வாகத்தினால் வெகுவிமர்சையாக நேற்று திங்கள்கிழமை தோட்ட முகாமையாளர் ருசிர உடவத்த தலைமையில் கொண்டாடபட்டது .

இதன்போது கடந்த 28வருடகாலமாக தோட்டத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சான்றுதல்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் லோகிதோட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் மதிய நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது .

இந்த பிறந்ததின நிகழ்வில் தோட்டத்தில் உள்ள 500தொழிலாளர்களுக்கும்
சான்றுதல்கள் வழங்கி வைக்கப்பட்டன இந் நிகழ்வு இன்றய தினம் தலவாகலை பெருந்தோட்ட நிருவனத்தின் கிழ் இயங்கும் 16தோட்டபகுதிகளிலும் இடம் பெற்றது

தொழிலாளர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 6000ம் பேருக்கு மதிய உணவும் சான்றுதல்களும் வழங்கி வைக்கப்பட்டது

 இந் நிகழ்வானது ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரொஸான் ராஜதுறை தலவாகலை பெருந்தோட்ட நிருவனத்தின் நிறைவேற்று இயக்குனர் சேனக்க அலவத்தேகம மற்றும் பிராந்திய இயக்குனர் திரு .நிஷாந்த அபேசிங்க அவர்களின் வழிகாட்டல்களின் கிழ் இடம்பெற்து

தலவாகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் 28வது பிறத்த தினத்தில் முகாமையாளர் தொழிலாளர்கள் உத்தியோகத்தர்களுக்கிடையில் கேக் வெட்டி சந்தோசத்தினை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடதக்கது.


No comments: