தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனியின் 28 ஆவது ஆண்டு நிறைவு விழா


(எஸ்.சதீஸ்)

ஹேலீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனியின் 28 வது ஆண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

விழாவை முன்னிட்டு பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் வைபவம் கம்பனி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மேற்படி விழாவில் சகல ஊழியர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். அத்தோடு 28 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் அனைத்து ஊழியர்களுக்கும் மதிய போசனமும் வழங்கப்பட்டது.

தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனியானது கடந்த 28 வருடங்களாக பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் ஊழியர்களின் அயராத உழைப்பின் காரணமாக கடந்த வருடங்களில் இலங்கையில் உள்ள பெருந்தோட்டக் கம்பனிகளில் முதன்மை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனி மக்களின் ஒத்துழைப்புடன் அரச, மற்றும் அரச சார்பற்ற விருதுகளை வென்றுள்ளது நிகழ்வானது தலவாக்கலை பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர், கலாநிதி ரொஷான் ராஜதுறை பிரதான நிறைவேற்று அதிகாரி, திரு.சேனக அலவத்தேகம பெருந்தோட்டத்துறை இயக்குநர் திரு. நிஷாந்த அபேசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
No comments: