கிழக்கில் 25000ம் ரூபாய் திட்டம் ஆரம்பம்


(காரைதீவு நிருபர் சகா)
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மண்டானை பகுதியை சேர்ந்த குலேந்தினி என்பவருக்கு இறுதியாகக் கிடைத்த குழந்தையால் 25000ரூபாய் சமூக சேவை அமைப்பினால் வழங்கப்பட்டிருந்தது

ஜந்தாவது குழந்தை பெற்றவர்களுக்கு 25ஆயிரம் ருபா வழங்கப்படும் என்ற வசீகரன்அறக்கட்டளை சமுகநிதிய திட்டத்தின்கீழ் அவருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

திருக்கோவில் பிரதேசத்தில் மிகவும் அடிப்படைவசிதிகளற்ற பின்தங்கிய பிரதேசமாகக்கருதப்படும் மண்டானைக்கிராமத்தில் வாழும் அனோஜன் குலேந்தினி தம்பதியினருக்கு இறுதியாகக்கிடைத்த குழந்தை ரஜோசனா.

மண்டானைக்கிராமத்திற்கு ஒருதொகுதி கொரோனா உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டபின்னர் அங்குள்ள  குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் வறுமை காரணமாக பால்மா கூட  பற்றாக்குறையாக இருப்பதாக  திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்  வசீகரன் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 76 குழந்தைகளுக்கு பால்மா வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம் பெற்றது.

பால்மா வழங்கிய அந்நிகழ்வில் 'அம்பாறை மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குள் வாழுகின்ற தமிழ்க்குடும்பங்களில் 5ஆவது பிள்ளை பெற்றால் அக்குடும்பத்திற்கு ருபா 25ஆயிரம் பண வெகுமதி வழங்கப்படும். 

6வது பிள்ளை பெற்றால் 50ஆயிரம் ருh வழங்கப்படும்' என்ற திட்டத்தை ஜேர்மனிய வசீகரன் அறக்கட்டளை சமுக நிதியத்தின் ஸ்தாபகரும் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளரும் காரைதீவுப்பிரதேசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தநிகழ்விற்கு பிரதமஅதிதியாக வருகை தந்திருந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் குறித்த தாயிடம் பணத்திளை வழங்கினார்.

வசீகரன் அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் தவிசாளர் கி.ஜெயசிறில் நிதியத்தின் அம்பாறை மாவட்டதலைவர் எஸ்.இராஜேந்திரன் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா சட்டமாணி அருள்.நிதான்சன் கிராமசேவையாளர் உள்ளிட்டோர் சமுகமளித்திருந்தனர்.

குறித்த றஜோசனா என்ற குழந்தையும் தாயுடன் அங்கு பால்மா பெற வந்திருந்த சந்தர்ப்பத்தில் பணப்பரிசு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தற்போது ஜேர்மனியில் வாழும் வசீகரன் அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபக  தம்பதியினர் தாயகத்தில் பல சமுகமையச் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். 

அதிலொரு அங்கமாக கொரோனா உலருணவுநிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.

அதேவேள தமிழ்ச்சமுதாயத்தில் பிறப்புவீதம் குறைவாகஇருப்பதையுணர்ந்து மேற்படி பணப்பரிசு திட்டத்தினை முன்வைத்து அதற்கான நிதியையும் அவர் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: